arivum tiruvum

67 %
33 %
Information about arivum tiruvum
Education

Published on March 9, 2014

Author: kadalkarai98

Source: authorstream.com

PowerPoint Presentation: அறிவும் திருவும் காயும் கனியும் PowerPoint Presentation:  தமிழ்நாட்டில் முனிவர்கள் காய்கனிகளையே அருந்தி வந்தார்கள் . பொதிய மலையில் முனிவர் ஒருவர் கடுந்தவம் புரிந்தார் . ( பன்னீராண்டு ) பசியின் கொடுமையறிந்த முனிவர் நாவல் மரத்தின் நற்கனியைக் கொய்து தேக்கிலையிற் பொதிந்து ஆற்றை நோக்கிச் சென்றார் . பெருமை வாய்ந்த அக்கனியை ஆற்றங்கரையில் வைத்துவிட்டு நீராடப் போந்தார் . PowerPoint Presentation:  சிறுமி கனியைக் காலால் மிதிக்கிறாள் . தவமுனிவர் “ பன்னீராண்டு நீ கடும் பசியால் நலிந்துழல்க ” என சபித்தார் . பன்னீராண்டு பசியால் வருந்திய பின்பு அமுதசுரபியினின்று பசி தீர்ந்தாளென்று பழஞ்சரிதை கூறுகின்றது . PowerPoint Presentation: நெல்லிக் கனி அதிகமான் அருந்தி நீடு வாழ ஆசையுற்றான் . செழுங்கனியைக் காவலாளர் மூலமாகப் பெற்றான் ஔவையார் கவி பாடி முன்னே சென்றார் . அப்பாட்டின் சுவையை அதிகமான் மகிழ்வுற்றான் . PowerPoint Presentation:  ஔவையார்க்கு நெல்லிக் கனியே ஏற்ற பரிசென்று எண்ணி கனியை அவரிடம் அகமலந்தளித்தான் . ஔவையார் தீஞ்சுவயினை அறிந்து திகைப்புற்றார் . பல நாள் முயன்று வருந்திப் பெற்ற அருங்கனியைத் தனருந்தி இன்புறக் கருதாது , பாடிவந்த கிழவிற்கு பரிசாக அளித்த வள்ளலின் அருங்குணத்தை ஔவையார் வாயாரப் புகழ்ந்து வாழ்த்தினார் . PowerPoint Presentation: “ நீல மணிமிடற்று ஒருவன் போல மன்னுக பெரும் நீயே தொன்னிலைப் பெருமலை விடரகத் தருமிசைக் கொண்ட சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது ஆதல் நின்னகத் தடக்கிச் சாதல் நீங்க எமக்கீத் தனையே ” ஔவையார் அருளிய வாழ்த்துரையில் கருநெல்லிக் கனியின் வரலாரும் அன்புடன் அளித்த அதிகமானது வள்ளன்மையும் ஒருங்கே விளங்கக் காணலாம் . PowerPoint Presentation:  பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலே தலையாய அறமென்று தமிழ் மறை கூறுகின்றது . இப்பண்பினைக் கண்டு வியந்த புலவர் ஒருவர் : “ கமழ்பூஞ் சாரல் கவினிய நெல்லி அமிழ்துவிளை தீங்கனி ஔவைக் கீந்த அரவக் கடற்றானை அதிகன் ” PowerPoint Presentation:  கனியென்னும் சொல் ஔவையுண்ட நெல்லிக்கனி போல அமிழ்தான கனிகளையே குறிக்குமென்று பரிமேலழகர் விளக்கியருளினார் . இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவரந் தற்று PowerPoint Presentation:  திருநாவுக்கரசர் தேவராத் திருப்பாட்டிலும் கனி என்னுஞ்சொல் அழியாப் பெரு வாழ்வளிக்கும் அமுதக் கனியையே குறிப்பிட்டுள்ளார் . கொய்யுலா மலர்ச்சோலைக் குல்யிகூவ மயிலாடும் ஆரூ ராரைக் கையினால் தொழாதொழிந்து கனியிருப்பக் காய்கவர்ந்த கள்வ னேனே

Add a comment

Related presentations

Related pages

Sivan kavasam Tamil - pcook.ru

... Sivamayam Vizhiyum Sivamayam Vazhiyum Sivamayam Mozhiyum Sivamayam Sivame SivameArulum Sivamayam porulum Sivamayam Arivum ... tiruvum Shivamē Shivamē ...
Read more